சைத்தானை தொடர்ந்து அண்ணாதுரை படத்தின் 10 நிமிடக் காட்சிகள் வெளியீடு

0
86
Vijay Antony

விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தின் 10 நிமிடக் காட்சிகள் படம் வெளிவருவதற்கு முன்பு வெளியிட்டது போன்று, அவரது அண்ணாதுரை படத்தின் 10 நிமிடக் காட்சிகளை வெளியிடுகின்றனர்.

ராதிகாவும், விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்திருக்கும் அண்ணாதுரை வரும் 30 ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக நாளை படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர். அத்துடன் படத்தின் 10 நிமிடக் காட்சிகளையும் வெளியிட உள்ளனர்.

விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தின் 10 நிமிடக் காட்சிகளை இதேபோல் படம் வெளியாகும் முன்பு வெளியிட்டனர். அது படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. பத்து நிமிடக் காட்சிகளைப் பார்த்தவர்களுக்கு, முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை அது அளித்தது.

அண்ணாதுரை படத்தின் காட்சிகளும் அதேபோல் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என நம்புகிறார்கள்.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் அளவுக்கு வசூலை குவித்தது. அதனால் அண்ணாதுரை படத்தையும் இந்திரசேனா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்திரசேனாவின் 10 நிமிடக் காட்சிகளும் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பசுக்களை ஏற்றிச் சென்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: 2 பேர் கைது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்