தமிழக அரசு மீது தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் ஈடுபட்டிருப்பதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

குதிரை பேரத்தின் அடிப்படையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு, தமிழக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசைக் கலைக்க ஸ்டாலின் முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், ஜனநாயக முறைப்படி தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், ஆனால் தமிழக அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். சைக்கிள் கேப்பில் முதல்வராக துடியாய்த் துடிப்பதாக ஸ்டாலினை அவர் விமர்சித்தார். மேலும், அவரின் கனவு பகல் கனவாகவே முடியும் என்றார்.

இதையும் படியுங்கள் : செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்