சைக்கிளில் வந்து ஓட்டு போட்ட விஜய்; பெட்ரோல் டீசல் விலை உயர்வுதான் காரணம் என்று கூறும் ரசிகர்கள்

0
195

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பல்வேறு பிரபலங்களும் ஓட்டு போட்டபடி இருக்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் தன்னுடைய இல்லத்திலிருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்கும் மையத்திற்கு எளிமையாக முறையில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிள் வந்து வாக்களித்தார். நடிகர் விஜய் திடீரென சைக்கிள் மூலம் வந்து வாக்குப்பதிவு செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய இல்லத்திலிருந்து புறப்பட்ட நடிகர் விஜய் வேகமாகச் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர் ஏராளமானானோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

 இதுக்குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. நடிகர்விஜய் நீலாங்கரையில் வாக்களிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சைக்கிளில் வந்து வாக்களித்தற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் காரணம் எனவும், மத்திய, மாநில அரசுகளுக்கு மறைமுகமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் என அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here