ஏர்டெல், வோடஃபோன் ஆகிய செல்போன் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை 42 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளன. இன்று(திங்கள்கிழமை) நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகைக்குப் பிறகு இந்தியாவில் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கட்டணங்களை அதிரடியாக குறைத்தன.

இந்த நிலையில் தொடர் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறி, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள், தங்களது கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன. வோடஃபோன் நிறுவனம் 28 நாட்களுக்கான கட்டணத்தை 179 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், ஓராண்டு கட்டணத்தை ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து 399 ரூபாயாக உயர்த்திள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின், இணையதள டேட்டா மற்றும் கால் செய்யும் அன்லிமிடெட் திட்டத்தில் 28 நாட்களுக்கான கட்டணத்தை 129 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதேபோல் ஓர் ஆண்டுக்கான திட்டம் ஆயிரத்து 699 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 398 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

இதேபோல ஜியோ நிறுவனமும் 40 விழுக்காடு வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here