சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர் வளர்மதி கைது

0
545

சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுடன் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் வளர்மதியை போலீசார் வலுகட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்த வட்டாசியரை எதிர்த்து மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வளர்மதியை வலுக்கட்டாயமாக போலீஸ் இழுத்து சென்று கைது செய்தது. நேற்று (திங்கள்கிழமை) இரவு பியூஷ் மனுஷை கைது செய்த போலீஸ் தற்போது வளர்மதியை கைது செய்துள்ளது.

சேலம் முதல் சென்னை வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசின் நிதியின்கீழ் எட்டு வழிச்சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக 274 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படவுள்ள இந்த சாலைக்காக 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலை அமைக்கப்பட உள்ள இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் வளர்மதி, சமூக ஆர்வலர் வளர்மதி கைது, வளர்மதி கைது, #SocialActivistValarmathi, Activist Valarmathi, Activist Valarmathi Arrested

சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர் வளர்மதி கைது

Social Activist Valarmathi Arrested

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here