சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 34 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பான 3 எப்.ஐ.ஆர் பதிவுகளில் 2 எப்.ஐ.ஆர் பதிவுகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் சேகர் ரெட்டி.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த புகார் தொடர்பாக சிபிஐ சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது 3 வழக்குகளை பதிவு செய்தது. ஒரே குற்றத்துக்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சேகர் ரெட்டி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளை ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கில் முதல் எப்.ஐ.ஆர் பதிவின் அடிப்படையில் சேகர் ரெட்டியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here