ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கத்தில் உருவான டூலெட் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருகிறது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் கலந்து கொண்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையும் இதற்கு கிடைத்தது. இப்போது, சிறந்த இந்திய திரைப்படம் என்ற விருதை பெற்றுள்ளது.

டூலெட் திரைப்படம் சென்னையில் வாடகை வீடு கிடைக்கும் சிரமத்தைப் பற்றியது. கத்துக்குட்டி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நம்பிராஜன் (கவிஞர் விக்ரமாதித்யனின் மகன்) டூலெட்டில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 1 முதல் 4 வரை ஹைதராபாத்தில் நடந்த ஆல் லைட்ஸ் இந்தியா இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவெலில் (ALIFF) சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது. ALIFF வருடந்தோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒன்றாகும்.

விருது வென்ற செழியனுக்கும் படத்தில் நடித்த, பங்காற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்