செர்கி ஐஸ்டென்ஸ்டீனின் 120வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் இணையதளம் தனது தேடுபொறியின் முகப்பில் டூடுல் வெளியிட்டுள்ளது.

செர்கி ஐஸ்டென்ஸ்டீன், 1898ஆம் ஆண்டு ஜன.22ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். இவர், தனது தந்தையைப்போன்றே, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் பயின்றார். அதன் பின்னர், ரஷிய புரட்சியில் இணைந்தார். இந்த நேரத்தில், மாஸ்கோவில் திரைப்பட கல்வியும் பயின்றார்.

அலெக்சாண்டர் நேவ்ஸ்கி
அலெக்சாண்டர் நேவ்ஸ்கி

1925ஆம் ஆண்டு ’ஸ்டிரைக்’ (Strike) என்னும் முதல் முழுநீள படத்தை அவர் இயக்கினார். அதனைத்தொடர்ந்து, பாட்டில்ஷிப் போடெம்கின், தி ஜென்ரல் லைன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன. அலெக்சாண்டர் நேவ்ஸ்கி, இவான் த டெரிபிள் ஆகிய படங்களுக்காக ஸ்டாலின் மற்றும் ஆர்டர் ஆப் லெனின் விருதுகளைப் பெற்றார்.

இவான் த டெரிபிள்
இவான் த டெரிபிள்

செர்கி ஐஸ்டென்ஸ்டீன், தனது 50வது வயதில் காலமானார். இவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கூகுள் இணையதளம் தனது தேடுபொறியின் முகப்பில் டூடுல் வெளியிட்டுள்ளது.

goo

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்