உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண்ணின் உருவ அமைப்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே ஆண்களை போன்ற வடிவமைப்பு கொண்ட 2 ரோபோக்கள் செய்தி வாசிப்பாளராக, சீனாவின் உசென் பகுதியில் உள்ள சேனலில் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அரசு செய்தி நிறுவனமான சின்குவா பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தியுள்ளது.

இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ரோபோ மனிதர்களைப் போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது.

‘சின் சியாமெங்’ என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிறிய காதணிகள், இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து சாதாரண பெண் போன்ற தோற்றத்தில் செய்தி வாசித்ததுள்ளது.

பீஜிங்கில் வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை இந்த ரோபோ வாசித்தது.

சின்குவா செய்தி சேனலும், சொகோவு எனும் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, கியூ மங் உருவத்தினை மாதிரியாகக் கொண்டு இந்த ரோபோவை உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here