சென்னையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, 90 கிலோ ஹெராயின உட்பட 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மலேசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 10 பேரைக் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்களில், அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டது இவைதான் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பிறந்தநாளில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார் ரஜினி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்