காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இசென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் , சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.

மாணவிகளுடன் உரையாற்றிய பின்னர், தன்னிடம் கடினமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார் ராகுல். அப்போது ஒரு மாணவி, ‘ஹாய் சார்…’ என்று சொல்லி கேள்வியை ஆரம்பித்தார். உடனே அவரை இடைமறித்த ராகுல், ‘என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க’ என்றார். உடனே அந்த மாணவியும், ‘ஹாய் ராகுல்’ என்றார். அதற்கு அங்கிருந்த மொத்த மாணவியர் கூட்டமும் கரகோஷம் எழுப்பியது.

தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்த ராகுலிடம், ‘ராபர்ட் வத்ரா குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி , ‘வதேரா மீது இருக்கும் குற்றச்சாட்டை இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள் புலன் விசாரணை செய்ய வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நான்தான் அவர் மீது விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லும் முதல் நபர். அதே போல, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நரேந்திர மோடி மீதும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

விசாரணை என்பது குறிப்பிட்ட நபர் மீது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்’ என்று பதில் அளித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தென்னிந்தியாவுக்கு என்ன செய்வீர்கள்? என்று மாணவி கேட்க, குறிப்பிட்ட பகுதிக்கு என்று கவனம் செலுத்தி நான் திட்டங்களை வகுக்கப்போவதில்லை. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ராகுல் பதிலளித்தார்.

காஷ்மீர் பிரச்னைக்கு போர் இல்லாமல் வேறு எப்படி தீர்வு காண முடியும்? என்ற கேள்விக்கு
காஷ்மீர் பிரச்னைக்குத் தீரவு காண பாகிஸ்தான் முதலில் பிற நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இந்திய ஆட்சியாளார்கள் உணர்வுப்பூர்வமாக நெருங்கிப் பழக வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு நீண்ட கால திட்டமிடல் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டாலும் கூட, காஷ்மீர் மக்களை நேசிக்கவும் வேண்டும்.

மோடியை ஏன் ஆரத்தழுவினீர்கள்? என்ற கேள்விக்கு மோடி மீதான அன்பை வெளிப்படுத்தவே அவரை ஆரத்தழுவினேன். எங்கள் மீது மோடி எப்போதுமே கோபத்தையும் வெறுப்பையுமே வெளிப்படுத்தி வருகிறார். எப்போதும் கோபத்துடன் இருக்கும் மோடிக்கு இந்த உலகின் மிக அழகான விஷயமான அன்பைக் காட்ட விரும்பினேன்.

அன்பின் மூலம் கோபத்தைக் குறைக்க முடியும் என்று நினைத்தேன். எனக்கு எப்போதுமே மோடி மீது கோபமோ வெறுப்போ இல்லை. அன்பு மூலமாக ஆத்திரத்தை அடக்குவது எனது குணம். எனது குணம் மட்டுமல்ல அது நாட்டின் குணம். குறிப்பாக தமிழர்களின் குணம். எப்படி பிறரிடம் அன்பு காட்டுவது என்பதை எனது தாய் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் மாணவிகளின் கேள்விகளுக்கு ராகுல் அளித்த பதிலில், இந்தியாவில் கல்விக்காக கூடுதல் நிதி செலவிடப்படும். தற்போதைய கல்வி முறை எதிர்கால சந்ததியினருக்கு உகந்ததாக இல்லை.

நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்டோர் மக்களின் பணத்தைத் திருடிச் சென்றனர்.

இளம் தொழில்முனைவோருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் சீனா 55,000 வேலை வாய்ப்வுகளை உருவாக்கி வருகிறது. அதே 24 மணி நேரத்தில் இந்தியாவில் வெறும் 300 வேலை வாய்ப்புகள்தான் உருவாக்கப்படுகின்றன என்று ராகுல் தெரிவித்தார்.

வணக்கம் ராகுல் என தெரிவித்த மாணவிக்கு வணக்கம் என தமிழில் பதிலளித்த ராகுல், பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது. பெண்களை இரண்டாம் நிலையாக கருதாமல் சமநிலை என்றே கருத வேண்டும். நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் ஆட்சியில் அமர்ந்ததும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் நிறைவேற்றும்.

கல்விக்காக குறைந்த அளவே அரசு செலவு செய்து வருகிறது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் சுயமாகவும், தன்னிறைவாகவும் செயல்பட வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வியின் தரம் உயர வேண்டும்.

ஜிஎஸ்டி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ஜிஎஸ்டியால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும். ஒரே வரியாக இருக்கும், அதுவும் குறைந்த வரியாக இருக்கும் என பதிலளித்தார்.

நீரவ்மோடிக்கு ரூ.35 ஆயிரம் கோடி வங்கிப் பணத்தை மத்திய அரசு தந்தது? அவர் எத்தனை பேருக்க வேலை தந்தார்? என ராகுல் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இளம் தொழில் முனைவோருக்கு வாய்ப்பு கொடுப்பதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாகும் என்று நம்புவதாக கூறிய ராகுல், சீனா 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என சுட்டிக்காட்டினார்.

என் தாய் சோனியாவிடம் இருந்து பணிவை கற்றுக் கொண்டேன். என்னுடைய கொள்கை என்பது எப்போதும் பரந்து விரிந்த மனப்பான்மையை சார்ந்தது. தற்போதைய பிரதமர் ஒரே கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் என்றும் பன்முகம் கொண்ட தேசத்திற்கு ஒரே கொள்கை ஒத்துவராது என்றார்.

உங்கள் பார்வையில் நாட்டின் வளர்ச்சிக்கு எது முக்கிய தடையாக உள்ளது என்ற கேள்விக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ’ஊழல்’ என பதிலளித்த ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்றும், அனில் அம்பானி நிறுவனம் போர் விமானங்களை தயாரித்ததே இல்லை என மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here