சென்னை வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் திங்கட்கிழமை (இன்று) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.

இதையும் படியுங்கள் : பசுவைக் கொன்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்

சென்னை வடபழனி அருகே தெற்குசிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வாகன நிறுத்துமிடத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கருகின. இதனால் ஏற்பட்ட கரும்புகைக் காரணமாக, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்தியா, மீனாட்சி, செந்தில் மற்றும் சஞ்சய் ஆகிய 4 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய ஐந்து பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்