பிரதமர் நரேந்திரமோடி, நாளை மறுநாள் (10 ஆம் தேதி) தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.) – வண்ணாரப்பேட்டை (வழி சென்ட்ரல்) இடையே உள்ள 10 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் சேவையை திருப்பூரில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 35 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகளை முடித்து சென்னையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயிலில் தினசரி 55 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர். கட்டணமாக ரூ.10 முதல் ரூ.70 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில், வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். புதிய வழித்தடத்திலும் ரெயில்கள் இயங்க இருப்பதால் கட்டணத்தை சற்று குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று(வியாழக்கிழமை) இரவு இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியானது. அதில் :

விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் ரூ.10, நங்கநல்லூர் ரோடு ரூ.20, ஆலந்தூர் ரூ.30, கிண்டி, சின்னமலை சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்னை சென்டிரல் ரூ.50, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.60, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.50, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் ரூ.60 என கட்டணம் வசூலிக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை ரூ.40, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம் ரூ.40, சென்னை சென்டிரல் ரூ.40, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.50, ஈக்காட்டுதாங்கல் ரூ.40, அசோக்நகர் ரூ.30, வடபழனி ரூ.20, அரும்பாக்கம் ரூ.10, கோயம்பேடு ரூ.10, திருமங்கலம், அண்ணாநகர் டவர் ரூ.20, அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம் ரூ.60, நங்கநல்லூர் ரோடு ரூ.50, ஆலந்தூர், கிண்டி ரூ.50, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., ரூ.40, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.30, அரசினர் தோட்டம் ரூ.20, சென்னை சென்டிரல் ரூ.10, ஐகோர்ட்டு, மண்ணடி ரூ.20, வண்ணாரப்பேட்டை ரூ.30, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் ரூ.50, வடபழனி ரூ.40, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு, திருமங்கலம் ரூ.40, அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர் ரூ.20, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ரூ.10, பரங்கிமலை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் ரூ.50, கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ்., ரூ.30, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.20, அரசினர் தோட்டம் ரூ.10, ஐகோர்ட்டு ரூ.10, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ரூ.20, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.50, கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.40, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.40, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி ரூ.30, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ரூ.20, எழும்பூர் 10, பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here