இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. 30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர்.

நேற்றிரவு நடைபெற்ற பிரமாண்டமான இறுதிச் சுற்றுப் போட்டிக்கான நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்சித் உள்ளிடடோர் கலந்துகொண்டனர். மிஸ் இந்தியா 2018 பட்ட்த்தை தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அனுக்ரீதி வாஸ் என்பவர் தட்டிச் சென்றார்.

DgFmDe7UwAElfuT

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் பயிலும் மாணவியான அனுக்ரீத்திக்கு கடந்த ஆண்டின் அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்திரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்