சென்னை பாக்ஸ் ஆபிஸ் – ஸ்பைடர்மேனை வீழ்த்திய ஜெமினிகணேசன்

0
194
Ranbir kapoor & katrina kaif

இந்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படம் பிடித்தாலும், ஆங்கில, இந்தி மற்றும் தெலுங்குப் படங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

கண்ணனின் இவன் தந்திரன் சென்ற வார இறுதியில் 3.43 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.20 கோடி. ஸ்ரீதேவின் மாம் சென்ற வார இறுதியில் சென்னையில் 4.73 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் இதன் வசூல், 48.12 லட்சங்கள்.

நானி, நிவேதா தாமஸ் நடித்த நின்னுக் கோரி நானியின் படங்களில் அதிக ஓபனிங்கை பெற்ற படம் என்ற சாதனையை படைத்துள்ளது. சென்ற வார இறுதியில் சென்னையில் 5.28 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 43.12 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

சென்ற வாரம் வெளியான நேரடித் தமிழப் படம் திரி முதல் மூன்று தினங்களில் 6.36 லட்சங்களை வசூலித்துள்ளது. சுமாரான வசூல். சென்ற வாரம் வெளியான இன்னொரு படம் ரூபாய் முதல் மூன்று தினங்களில் 11.21 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

5. ஸ்பைடர்மேன் – ஹோம் கமிங் (ஆங்கிலம்)
ஸ்பைடர்மேன் சென்ற வார இறுதியில் சென்னையில் மட்டும் 29.31 லட்சங்களை வசூலித்துள்ளது. வார நாள்களில் 83.20 லட்சங்களை வசூலித்திருப்பது ஒரு சாதனை. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 2.16 கோடிகள். நல்ல வசூல்.

4. பண்டிகை
பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்துள்ள பண்டிகை நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. ரசிகர்களின் ஆதரவும் மோசமில்லை. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 32.90 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

3. ஜக்கா ஜாஸுஸ் (இந்தி)
ரன்பீர் கபூர், கத்ரினா கைப் நடித்துள்ள இந்தப் படம் பல வருடங்கள் கிடப்பில் போடப்பட்டதால் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் வெளியானது. வடமாநிலங்களிலும் படத்துக்கு சுமார் வசூல்தான். ஆனால் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 40.20 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. வார் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் (ஆங்கிலம்)
ஏற்கனவே ஏப்ஸ் சீரிஸில் பல படங்கள் வெளிவந்துள்ளதால் இதற்கு கணிசமான ரசிகர்கள் உள்ளனர். சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 65.65 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
அதர்வா, சூரி நடித்துள்ள ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் சென்ற வாரம் வெளியானது. டிக்கெட் கட்டணம் உயர்ந்த நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளை தொடர்ந்து புறக்கணிக்கும் சூழலில் முதல் மூன்று தினங்களில் 69 லட்சங்களை வசூலித்துள்ளது. படம் சுமார் என்று விமர்சனங்கள் வரும்நிலையில் வார நாள்களில் இந்த வசூலை படம் தக்க வைக்குமா என்பது சந்கேமே.

இதையும் படியுங்கள்: கமலை மிரட்டும் அந்தத் தைரியம் திமுக மீது வழக்குப் போட இருக்கிறதா?

இதையும் படியுங்கள்: #கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்கு இது தெரியும்; ஆனால் உங்களிடம் சொல்லாது

இதையும் படியுங்கள்: மக்களைப் பத்திப் பேசினா தேசவிரோதி என்கிறார்கள்; இந்த நிலை மாற வேண்டும்”: டி.எம். கிருஷ்ணா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்