சென்னை பாக்ஸ் ஆபிஸ் – 3 தினங்களில் ஒரு கோடியை கடந்த ரங்கஸ்தலம்

0
310
Samantha & Ram Charan

சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரங்கஸ்தலம் புதிய சாதனை படைத்துள்ளது. முதல் மூன்று தினங்களில் ஒரு கோடியை கடந்த முதல் தெலுங்குப் படம் என்ற பெருமையை ரங்கஸ்தலம் தட்டிச் சென்றுள்ளது (பாகுபலியை இதில் கணக்கில் கொள்ளவில்லை)

தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தத்தால் புதிய தமிழ்ப் படங்கள் மார்ச் 1 முதல் வெளியாகவில்லை. பிறமொழிப் படங்களே பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமித்துள்ளன. தெலுங்குப் படமான எம்எல்ஏ சென்னையில் இதுவரை 28.15 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்திப் படம் ரெய்டு கடந்த ஞாயிறுவரை 2 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.

ஆங்கிலப்படமான பிளாக் பேந்தர் தனது 7 வது வார இறுதியில் 3.80 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. ஞாயிறுவரையிலான இதன் சென்னை வசூல், 3.77 கோடிகள். இன்னொரு ஆங்கிலப் படமான பசிபிக் ரிம் அப்ரைசிங் சென்றவார இறுதியில் 4.90 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.91 கோடி.

5. கலகலப்பு 2
தமிழ்ப் படங்களில் கலகலப்பு 2 படமே இதுவரை திரையரங்குகளில் தாக்குப் பிடிக்கிறது. சென்றவார இறுதியில் 5.55 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 5.70 கோடிகளை தனதாக்கியுள்ளது.

4. Hichki (இந்தி)
ராணி முகர்ஜி நடித்துள்ள இந்த இந்திப் படம் சென்ற வார இறுதியில் 13.58 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 79.44 லட்சங்கள்.

3. Ready Player One (ஆங்கிலம்)
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படமான இது சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. அவருக்குப் பிடித்தமான சயின்ஸ் பிக்ஷன். முதல் மூன்று தினங்களில் சென்னையில் இதன் வசூல், 33.78 லட்சங்கள்.

2. Baaghi 2 (இந்தி)
இந்திப் படமான பாகி 2 சென்றவாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 147 காட்சிகளில் 78.77 லட்சங்களை இப்படம் வசூலித்து இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

1. Rangasthalam (தெலுங்கு)
ராம் சரண், சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படத்தின் ஸ்டில்கள் வெளியான போதே தமிழகத்தில் அது கவனம் பெற்றது. காரணம் சமந்தா. அவரது கிராமத்துத் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. வேறு தமிழ்ப் படங்கள் இல்லாத நிலையில் ரங்கஸ்தலம் அடித்து கிளப்பியிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் சுமார் 207 திரையிடல்களில் 1.01 கோடியை வசூலித்துள்ளது. பாகுபலி தவிர்த்து ஒரு தெலுங்குப் படம் ஓபனிங்கில் ஒரு கோடியை சென்னையில் தாண்டுவது இதுவே முதல்முறை.

இதையும் படியுங்கள்: #BharatBandh: வடமாநிலங்களில் பரவும் வன்முறை; 4 பேர் பலி; வாகனங்களுக்கு தீ வைப்பு

இதையும் படியுங்கள்: கௌதம் மேனன் பொய் சொல்கிறாரா…?

இதையும் படியுங்கள்: எழுகவே, தமிழ் பூமி

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்