சென்னை பாக்ஸ் ஆபிஸ் – 3வது வாரமும் முதலிடத்தில் வேலைக்காரன்

0
554
Nayantara & Sivakarthikeyan

3 வது வாரமும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை வேலைக்காரன் பிடித்துள்ளது. இந்தப் படம் தவிர மற்ற தமிழ்ப் படங்களின் வசூல் டல்லடிக்க, ஆங்கிலப் படங்கள் அசத்துகின்றன.

சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் வெளியான சங்குசக்கரம், களவாடிய பொழுதுகள், உள்குத்து ஆகிய படங்கள் தங்களின் வசூலை நிறுத்தியுள்ளன. களவாடிய பொழுதுகள் சென்னையில் 5.35 லட்சங்களையும், சங்குசக்கரம் 7.56 லட்சங்களையும், உள்குத்து 25.80 லட்சங்களையும் மட்டுமே வசூலித்துள்ளன. கமர்ஷியலாக இந்த மூன்று படங்களுமே தோல்வி.

சென்றவாரம் வெளியான ஆங்கிலப் படம் பிட்ச் பெர்பெக்ட் 3 முதல் மூன்று தினங்களில் சென்னையில் 5.42 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்ற வாரம் வெளியான ஜனனி அய்யரின் விதி மதி உல்டா திரைப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 7.37 லட்சங்களை வசப்படுத்தியிருக்கிறது.

சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹே இன்னும் சென்னையில் வசூலிக்கிறது. இதன் சென்ற வார சென்னை வசூல், 9.26 லட்சங்கள். நேற்றுவரை இதன் சென்னை வசூல், 1.69 கோடி.

5. அருவி
அருவி இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்றவாரம் சென்னையில் 17.61 லட்சங்களை படம் வசூலித்துள்ளது. நேற்றுவரை அருவியின் சென்னை வசூல், 2.35 கோடிகள்.

4. பலூன்
ஜெய், அஞ்சலி நடித்துள்ள ஹாரர் படமான பலூன் சென்ற வார இறுதியில் 26.53 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 1.09 கோடி.

3. ஜுமான்ஜி – வெல்கம் டு தி ஜங்கிள் (ஆங்கிலம்)
இந்த ஆங்கிலப் படம் சென்னையில் நன்றாகப் போகிறது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 40.14 லட்சங்கள். இதுவரை 1.29 கோடியை வசப்படுத்தியுள்ளது.

2. இன்சிடியஸ் – தி லாஸ்ட் கீ (ஆங்கிலம்)
சென்ற வாரம் இந்த ஹாரர் படம் வெளியானது. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். முதல் மூன்று தினங்களில் 78.25 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. வேலைக்காரன்
தொடர்ந்து மூன்றாவது வாரமாக முதலிடத்தில் வேலைக்காரன் உள்ளது. வார நாள்களில் 82.68 லட்சங்களையும், வார இறுதியில் 81.18 லட்சங்களையும் படம் வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 8.16 கோடிகள்.

இதையும் படியுங்கள் : குஜராத்: சாதி ரீதியாக துன்புறுத்தல்; தமிழக மாணவர் தற்கொலை முயற்சி; மருத்துவர்கள் மீது வழக்குப்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்