சென்னை பாக்ஸ் ஆபிஸ் – வசூலை அள்ளுவது அஜித்தா, ஜெயம் ரவியா?

0
712

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் ஜெயம் ரவியின்திரைப்படமான கோமாளி திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

3/ அக்‌ஷய் குமார் நடிப்பில் ஜெகன் சக்தி இயக்கத்தில் வெளியான மிஷன் மங்கள் திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இத்திரைப்படத்தில்வித்யா பாலன்,டாப்சி உள்ளிடோரும் நடித்துள்ளனர்.  வெளியான முதல் நாளிலேயே மிஷன் மங்கள் திரைப்படம் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அக்‌ஷய் குமார்  திரைப்படங்களிலேயே வெளியான 4 நாட்களில் உலகம் முழுவது 97 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது மிகப்பெரிய ஓபனிங் வசூலாக பார்க்கப்படுகிறது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதியில் மிஷன் மங்கள் திரைப்படம் 3வது இடத்தை பிடித்துள்ளது

2/ எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்து, அவரே நேரடியாக விநியோகஸ்தர்களிடம் கொடுத்து விநியோகம் செய்தார். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படம் முதல் நாளில் பெரும் வரவேற்பை பெற்றது. 

பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றி பேசியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரியஆதரவு கிடைத்தது . விஸ்வாசம் படத்தை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை திரைப்படமும் ரூ.100 கோடி வசூல் செய்து அஜித்தின் ரூ.100 கோடி வசூல் செய்ததிரைப்படங்களுடன்  இணைந்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

1/ ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கோமாளி.இத் திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.  சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வார இறுதி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுஇந்தப் படம். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்திருக்கும்  கோமாளி படம் ரசிகர்கள்மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சென்னையில்வெளியான முதல் வார இறுதியில் 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது கோமாளி.