சென்னை பாக்ஸ் ஆபிஸ் – ரேம்பேஜ் ‘ராக்’ஸ்

0
191

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது பழைய பழமொழி. சென்னை பாக்ஸ் ஆபிஸின் நிலையை யானை தேய்ந்து பேன் ஆனது என்றுதான் சொல்ல வேண்டும். பாக்ஸ் ஆபிஸின் டாப் 10 இல் ஒரு தமிழ்ப்படம்கூட இல்லை. ஒன்றரை மாதங்களாக படம் வெளியாகாத நிலையில் அதனை எதிர்பார்ப்பதும் சரியில்லை.

தி ஹரிகேன் ஹெய்ஸ்ட் ஆங்கிலப் படம் சென்ற வார இறுதியில் ஐம்பதாயிரத்துக்கும் குறைவாகவே சென்னையில் வசூலித்தது. ஞாயிறுவரை அதன் சென்னை வசூல், 67.37 லட்சங்கள். இர்பான் கான் நடித்த இந்திப் படம் பிளாக்மெயில் சென்றவார இறுதியில் 81.30 ஆயிரங்களை வசூலித்தது. ஞாயிறுவரை அதன் சென்னை வசூல், 31.80 லட்சங்கள்.

இந்திப் படம் பாகி 2, சென்றவார இறுதியில் 2.80 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.79 கோடி.

5. பீட்டர் ரேபிட் (ஆங்கிலம்)
இந்த ஆங்கிலப் படம் சென்னையில் சென்ற வார இறுதியில் 7 லட்சங்களை வசூலித்தது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 63.27 லட்சங்கள்.

4. கம்மார சம்பவம் (மலையாளம்)
திலீப், சித்தார்த் நடித்த மலையாப் படம். தமிழ் நடிகரான சித்தார்த் இருந்தும் சென்ற வார இறுதியில் வெளியான படம் மூன்று தினங்களில் 9.31 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. ஆங்கில, இந்திப் படங்கள் 50 லட்சங்களை கடந்து ஓபனிங்கில் சாதனைப் படைக்கையில் இந்த வசூல் மிகக்குறைவே.

3. ரெடி பிளேயர் ஒன் (ஆங்கிலம்)
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இந்தப் படம் ஓபனிங்கில் ஓரளவு வசூலை பெற்றாலும், அடுத்தடுத்த நாள்களில் வசூலில் தரைதட்டியது. இவ்வளவு நாள்கள் படம் தாக்குப்பிடித்து வசூலித்திருப்பது ஆச்சரியம். சென்றவார இறுதியில் 11 லட்சங்களை வசூலித்த படம், ஞாயிறுவரை சென்னையில் 1.10 கோடியை வசப்படுத்தியுள்ளது.

2. அக்டோபர் (இந்தி)
வருண் தவான் நடித்துள்ள சூரஜ் சர்க்காரின் புதிய படம். சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 45.22 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. ரேம்பேஜ் (ஆங்கிலம்)
ராக் என்கிற ட்வைனி ஜான்சன் நடித்துள்ள படம். இவரது நடிப்பில் பிரமாண்ட மிருகங்களை வைத்து வெளியான ஜுமான்ஜி 2 உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதிலும் ராட்சஸ கொரில்லா, முதலை என்று கிராபிக்ஸில் விளையாடியிருக்கிறார்கள். சென்னையில் முதல் மூன்று தினங்களில் 234 திரையிடல்களில் 1.24 கோடியை படம் வசப்படுத்தியுள்ளது. தமிழின் முதல்வரிசை நடிகர்களின் படங்களின் வசூலுக்கு சற்றும் குறைவில்லை.

இதையும் படியுங்கள்: ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகார் – சிக்கிய பிரபல இயக்குனர்

இதையும் படியுங்கள்: #NoIPLinChennai: சோறா, ஸ்கோரா? தெறிக்கவிட்ட தமிழ் மக்கள்

இதையும் படியுங்கள்: அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம் செய்த கோடக் மஹிந்திரா வங்கி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்