சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் மிஸ்டர் லோக்கல் உள்ளது. படம் ரசிகர்களை எந்தவகையிலும் கவராத நிலையில், இந்த முதலிடம் அடுத்தவாரம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜீவா நடித்திருக்கும் கீ திரைப்படம் சென்ற வார இறுதியில் சென்னையில் 1.47 லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 59 லட்சங்கள். தோல்வி. 

சென்றவாரம் வெளியான நட்புன்னா என்னான்னு தெரியுமா நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும் அறிமுகமில்லாத முகங்கள் காரணமாக படத்திற்கு கூட்டமில்லை. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 5.85 லட்சங்கள்.

இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்களில் ஒன்று அவெஞ்சர்ஸ் – என்ட் கேம். இந்தப் படம் சென்ற வார இறுதியில் 7.20 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. அதன் இதுவரையான சென்னை வசூல் மட்டும் 9.90 கோடிகள். முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களின் வசூல்.

மகேஷ்பாபுவின் மகரிஷி வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் சென்றவாரம் மகரிஷியின் வசூல் 7.65 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 90 லட்சங்கள்.

சென்ற வாரம் வெளியான ஹாலிவுட் படம் கியானு ரீவ்ஸ் நடித்த ஜான் விக் 3 – பேரபெல்லம். ஜான் விக் ரசிகர்கள் தமிழகத்தில் அதிகம் இருந்தும் முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 10.85 லட்சங்கள் மட்டுமே. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படமே இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது.

5.டி டி பியார் டி (இந்தி)

அஜய் தேவ்கான் நடித்திருக்கும் இந்த இந்திப் படம் சென்ற வாரம் வெளியானது. படத்துக்கு நல்ல ஓபனிங். தமிழில் முதல் மூன்று தினங்களில் 15 லட்சங்களை வசூலித்துள்ளது.

4.அயோக்யா

தெலுங்கு டெம்பரின் ரீமேக்கான இது தெலுங்குப் படம் அளவுக்கோ, டெம்பரின் இந்தி ரீமேக் சிம்பா   அளவுக்கோ ரசிகர்களை கவரவில்லை. சென்றவார இறுதியில் இதன் சென்னை வசூல் 16.30 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.51 கோடியை சென்னையில் வசமாக்கியுள்ளது.

3.100

அதர்வா நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் சென்றவார இறுதியில் 16.75 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 73.30 லட்சங்கள்.

2.மான்ஸ்டர்

ஒருநாள் கூத்து நெல்சன் இயக்கியிருக்கும் மான்ஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. சின்ன வித்தியாசமான ஐடியா அனைவரையும் கவர்ந்துள்ளது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் சுமார் 123 திரையிடல்களில் 28.15 லட்சங்களை வசூலித்துள்ளது.

1மிஸ்டர் லோக்கல்

முதலிடத்தில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல். இயக்குநர் ராஜேஷின் கற்பனை வறட்சி இந்தப் படத்திலும் தொடர்கிறது. சென்ற வாரம் வெளியான படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. எனினும் சிவகார்த்திகேயனுக்கான ஓபனிங் சிறப்பு. முதல் மூன்று தினங்களில் 396 திரையிடல்களில் சுமார் 1.90 கோடியை படம் வசூலித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here