414

சென்னை பாக்ஸ் ஆபிஸ் இந்த வாரம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலப் படங்களின் ஆதிக்கத்திலிருந்து மீண்டுள்ளது. டாப் 5 இடங்களில் 4 தமிழ்ப் படங்கள். இரும்புத்திரை முதலிடத்தில் உள்ளது.

அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படம் நேற்றுவரை சென்னையில் 92.37 லட்சங்களை வசூலித்துள்ளது. ரங்கஸ்தலம், பரத் அனே நேனு படங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான வசூல். தமிழ்ப்படமான தியா சென்ற வார இறுதியில் 2.32 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 94.65 லட்சங்கள்.

அமிதாப்பச்சனின் 102 நாட்அவுட் இந்திப் படம் நேற்றுவரை 48.87 லட்சங்களும், அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் 6.45 கோடிகளும் வசூலித்துள்ளன. சென்னையில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் என்ற பெருமை இதன் மூலம் இன்ஃபினிட்டி வார் படத்துக்கு கிடைத்துள்ளது.

5. ராசி (இந்தி)
அலியா பட் நடித்துள்ள இந்த இந்திப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 31 லட்சங்கள்.

4. இருட்டு அறையில் முரட்டு குத்து
இந்த அடல்ட் ஹாரர் காமெடி, வார நாள்களில் 328 காட்சிகளில் 1.08 கோடியும், வார இறுதியில் 174 காட்சிகளில் 54.59 லட்சங்களும் வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 3.02 கோடிகள்.

3. இரவுக்கு ஆயிரம் கண்கள்
மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது. த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் முதல் மூன்று தினங்களில் 177 திரையிடல்களில் 58.26 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. மகாநதி (தெலுங்கு)
கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கியிருக்கும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 58.75 லட்சங்கள்.

1. இரும்புத்திரை
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடித்துள்ள இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல் மூன்று தினங்களில் 207 திரையிடல்களில் 1.27 கோடியை வசூலித்துள்ளது. நல்ல ஓபனிங்.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்