சென்னை பாக்ஸ் ஆபிஸ் – முதலிடத்தில் யோகி பாபு படம்

0
990


சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் யோகி பாபுவின் கூர்கா முதலிடத்தில் உள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபிஸில் விமலின் களவாணி 2 சென்றவார இறுதியில் 2.90 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 26.15 லட்சங்கள். படம் தோல்வி.

சமந்தாவின் தெலுங்குப் படமான ஓ பேபி இரு தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. சென்னையில் சென்றவார இறுதியில் 3.50 லட்சங்களை வசூலித்த படம் ஞாயிறுவரை 18 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

சென்றவாரம் வெளியான புதிய படம் போதை ஏறி புத்தி மாறி. விமர்சகர்கள் நல்ல மேக்கிங் என்று படத்தை பாராட்டியுள்ளனர். எனினும் பிரபலங்கள் இல்லாததால் முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் சென்னையில் 7.35 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. 

ஜோதிகாவின் ராட்சசி சுமாரான விமர்சனங்களையே பெற்றது. சென்ற வார இறுதியில் 12.90 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் ஞாயிறுவரை சென்னையில் 1 கோடியை வசூலித்துள்ளது.

5. வெண்ணிலா கபடிக்குழு 2

விக்ராந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் வெண்ணிலா கபடிக்குழு 2 விமர்சகர்களையும், ரசிகர்களையும் கவரவில்லை. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 19.30 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. சூப்பர் 30 (இந்தி)

ஹிர்த்திக் ரோஷன் நடித்திருக்கும் சூப்பர் 30 மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சென்றவாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 34.60 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

3. ஸ்பைடர் மேன் – ஃபார் ப்ரம் ஹேnம் (ஆங்கிலம்)

சென்ற வாரம் முதலிடத்தில் இருந்த படம் இந்த வாரம் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. சென்றவார இறுதியில் இதன் சென்னை வசூல் 39 லட்சங்கள். கடந்த ஞாயிறுவரை சென்னையில் இப்படம் 2.25 கோடிகளை வசூலித்துள்ளது.

2. கொரில்லா

ஜீவா நடித்திருக்கும் கொரில்லா பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. சென்றவாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 44.80 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. கூர்கா

யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் கூர்காவும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. படம் ரசிகர்களை கவரவில்லை. எனினும் சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 48.85 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்த வசூல் வார நாள்களில் தொடருமா என்பதே பெரும் கேள்விக்குறி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here