சென்னை பாக்ஸ் ஆபிஸ் – முதலிடத்தில் கலகலப்பு 2, மூன்றாமிடத்தில் சவரக்கத்தி

0
570

எதிர்பார்த்தது போல் கலகலப்பு 2 சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்த்த மிஷ்கினின் சவரக்கத்தி மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது.

துரையின் ஏமாலி 25 லட்சங்களுடன் சென்னையில் தனது வசூலை நிறுத்தியுள்ளது. படைவீரன் 10.5 லட்சங்களுடன் அடங்கிவிட்டது. மதுரவீரன் 33 லட்சங்கள். த்ரிஷாவின் முதல் மலையாளப் படம் ஹே ஜுட் சென்னையில் சுமார் 15 லட்சங்கள் வசூலித்துள்ளது.

சென்ற இரு வாரங்களில் வெளியான படங்களில் பாகமதியும், பத்மாவத்தும் வசூலில் கலக்கின. பாகமதி கடந்த ஞாயிறுவரை 1.90 கோடியை வசூலித்துள்ளது. டப்பிங் படம் ஒன்றுக்கு இது அமோகமான வசூல்.

கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தி 15:17 டூ பாரிஸ் திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. ஈஸ்ட்வுட் படங்களில் இதற்குதான் குறைவான ரேட்டிங். சென்னையில் படம் முதல் மூன்று தினங்களில் 5.33 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

சென்றவாரம் வெளியான அர்ஜுனின் சொல்லிவிடவா பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தனது மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுன் எடுத்த இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 7.20 லட்சங்களை மட்டுமே வசூலித்து தோல்வி கண்டிருக்கிறது. அதேநேரம் தெலுங்குப் படமான இன்டெலிஜென்ட் முதல் மூன்று தினங்களில் 7.98 லட்சங்களை வசூலித்து சொல்லிவிடவா படத்தை முந்தியிருக்கிறது.

5. பத்மாவத்
இந்தியிலும், தமிழிலும் பத்மாவத் சென்னையில் ஓடுகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 20.61 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல், 4.54 கோடிகள்.

4. ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்
முதல் வாரத்தில் கோடிக்கு மேல் வசூலித்து முதலிடத்தைப் பிடித்த விஜய் சேதுபதி படம் இரண்டாவது வாரத்தில் நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது. சென்ற வார இறுதியில் 25.22 லட்சங்களை வசூலித்த படம் ஞாயிறுவரை சென்னையில் வசூலித்தது, 2.54 கோடிகள்.

3. சவரக்கத்தி
மிஷ்கின் எழுதி நடித்திருக்கும் சவரக்கத்தியில் ராம் நாயகன். இரண்டு பிரபலங்கள் இருந்தும் படம் சென்னையில் முதல் மூன்று தினங்களில் 135 காட்சிகளே திரையிடப்பட்டன. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 34.05 லட்சங்கள். மிகமிக குறைவு.

2. பேடு மேன் (இந்தி)
அக்ஷய் குமார் நடித்துள்ள இந்திப் படம் பேடு மேன் சென்ற வாரம் வெளியானது. தமிழரின் சாதனை கதையை மையப்படுத்திய இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 141 காட்சிகளில் 68.09 லட்சங்களை வசூலித்துள்ளது. நல்ல வசூல்.

1. கலகலப்பு 2
சுந்தர் சி.யின் கலகலப்பு 2 முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிரிப்பு குறைவாக உள்ள இந்தப் படம் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முதல் மூன்று நாளில் சென்னையில் 261 காட்சிகளில் 1.57 கோடியை வசப்படுத்தியுள்ளது. இது ஏறக்குறைய விஜய் சேதுபதியின் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படத்தின் ஓபனிங் வசூலுக்கு சமம். வரும் நாள்களிலும் நல்ல வசூல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

இதையும் படியுங்கள்: ராமர் பாலத்தைப் பற்றி “சயின்ஸ் சேனல் ” சொல்வதென்ன ?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்