சென்னை பாக்ஸ் ஆபிஸ் – முதலிடத்தில் சிவலிங்கா

0
3051
Charlize Theron & Vin Diesel

சென்னை பாக்ஸ் ஆபிஸில் முந்தையவார படங்களே இந்தவாரமும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அடுத்த வாரம் பாகுபலி 2 வெளியாவதால் எச்சரிக்கையாக சென்ற வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்திப் படம் பேகம் ஜான் சென்ற வார இறுதியில் 91 ஆயிரங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 9.83 லட்சங்கள். மலையாளப் படமான சகாவு சென்ற வார இறுதியில் 3.30 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வNல், 8.51 லட்சங்கள். நிவின் பாலி நடித்துள்ள படம் இது.

மணிரத்னத்தின் காற்று வெளியிடை சென்ற வார இறுதியில் 4.08 லட்சங்களை தனதாக்கியுள்ளது. நேற்றுவரை அதன் சென்னை வசூல், 2.55 கோடிகள். மணிரத்னம் படத்துக்கு இது மிகச்சுமார். கே.வி.ஆனந்தின் கவண் சென்ற வார இறுதியில் 8.70 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை சென்னையில் இதன் வசூல், 3.53 கோடிகள்.

5. கடம்பன்
ஆர்யாவின் கடம்பன் தோல்வியடைந்துள்ளது. சென்ற வார இறுதியில் 12.17 லட்சங்களை வசூலித்த படம், நேற்றுவரை சென்னையில் 90.60 லட்சங்களை மட்டுமே தனதாக்கியுள்ளது. 22 கோடியில் தயாரான இந்தப் படம், அனைத்துத் தரப்பினருக்கும் நஷ்டத்தை தந்துள்ளது.

4. ஸ்மர்ஃப்ஸ் – தி லாஸ்ட் வில்லேஜ்
இந்த ஆங்கிலப் படம் சென்ற வாரம் வெளியானது. குழந்தைகளுக்குப் பிடித்தமான கதாபாத்திரம். முதல் மூன்று தினங்களில் சென்னையில் 13.40 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

3. தி ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்
உலக அளவில் வசூல்சாதனை படைத்துவரும் இந்தப் படம், சென்ற வார இறுதியில் சென்னையில் 52.38 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 1.72 கோடி. மாநகரம் படத்தின் சென்னை வசூலைவிட இது அதிகம்.

2. ப.பாண்டி
தனுஷின் ப.பாண்டி சென்ற வார இறுதியில் 53.16 லட்சங்களை தனதாக்கியுள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 1.31 கோடி. படத்திற்கு கிடைத்த விமர்சனத்துக்கு இந்த வசூல் குறைவுதான்.

1. சிவலிங்கா
லாரன்சுக்கு சம்பளம் 12 கோடிகளாம். ஆர்யா, விஷால் போன்றவர்களுடன் ஒப்பிட்டால் வொர்த்தான சம்பளம். என்னவொரு மோசமான படமாக இருந்தாலும் லாரன்ஸ் நடித்தால் சென்னையில் இரண்டு கோடியை தாண்டிவிடுகிறது. சிவலிங்கா சென்ற வார இறுதியில் 62.70 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 2.19 கோடிகள்.

வரும் வாரம் பாகுபலி 2 வெளியாவதால் அடுத்த வாரம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இல்லை. பாகுபலியை மட்டும் தியேட்டரில் ஓட்டினால் அதைத்தவிர வேறு படங்களை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்க்க முடியாதே.

இதையும் படியுங்கள்: கொடநாடு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது?

இதையும் படியுங்கள்: 2017 முதல் காலாண்டில் கரையேறிய படங்கள் எவை? – ஓர் அலசல்

இதையும் படியுங்கள்: உங்களை நாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?

இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் ஹிஜாபுடன் விளையாட அனுமதி: சாதித்துக் காட்டிய 16 வயது இளம்பெண்

இதையும் படியுங்கள்: பெண்ணுறுப்புச் சடங்கு: இலங்கை முஸ்லிம்களிடம் விவாதம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்