சென்னை பாக்ஸ் ஆபிஸ் – தானா சேர்ந்த கூட்டம் முதலிடம்

0
568

சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹாலிவுட் படமான இன்சிடியஸ் – தி லாஸ்ட் கீ திரைப்படம் சென்னையில் 1.30 கோடியை வசூலித்துள்ளது. ஜுமான்ஜி – வெல்கம் டு தி ஜங்கிள் திரைப்படம் சென்ற வார இறுதியில் 2.19 லட்சங்களை வசூலித்துள்ளது. அது சென்னையில் ஞாயிறுவரை 1.56 கோடியை தனதாக்கியுள்ளது. பல தமிழ்ப் படங்கள் இதில் கால்வாசியை வசூலிப்பதில்லை.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் தி போஸ்ட் சென்ற வாரம் வெளியானது. டைனசர் போன்று பிரமாண்டம் எதுவும் இல்லாததால் முதல் மூன்று தினங்களில் 4.48 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.

5. ஜெய் சிம்ஹா (தெலுங்கு)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்திருக்கும் ஜெய் சிம்ஹா சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 9.49 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. அக்னியாதவாஸி (தெலுங்கு)
பவன் கல்யாண் நடித்திருக்கும் இந்தத் தெலுங்குப் படம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியானது. வார இறுதியில் 12.47 லட்சங்களை வசூலித்த படம், ஞாயிறுவரை 70.21 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

3. குலேபகாவலி
பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 37.78 லட்சங்களை மட்டுமே வசூலித்து தோல்வியடைந்துள்ளது.

2. ஸ்கெட்ச்
விக்ரமின் ஸ்கெட்சும் ரசிகர்களை பூரணமாக திருப்திப்படுத்தவில்லை. முதல்வார இறுதியிலேயே படம் தள்ளாட ஆரம்பித்துள்ளது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 1.39 கோடியை வசூலித்திருந்தாலும், தானா சேர்ந்த கூட்டத்தின் ஓபனிங்குடன் ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு.

1. தானா சேர்ந்த கூட்டம்
சென்ற வாரம் வெளியான படங்களில் தானா சேர்ந்த கூட்டத்துக்கே அதிக ரசிகர்கள், அதிக கூட்டம். முதல் மூன்று தினங்களில் படம் 2.38 கோடிகளை வசூலித்துள்ளது. திங்கள், செவ்வாய் விடுமுறை என்பதால் இந்த வார வசூலும் ஒன்றரை கோடிகளை சாதாரணமாக தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஜெயலலிதா டிச.4ஆம் தேதியே இறந்து விட்டார்; அப்பல்லோவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here