லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ்ஓனர் திரைப்படம் சென்னையில் நேற்றுவரை 5.25 லட்சங்களை வசூலித்துள்ளது. அதன் ஓட்டமும் நேற்றுடன் நிறுத்தத்துக்கு வந்துள்ளது. விமர்சகர்கள் பாராட்டிய ஜீவி திரைப்படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. சென்ற வார இறுதியில் 3.62 லட்சங்களை வசூலித்த படம் நேற்றுவரை 11.68 லட்சங்களை மட்டுமே சென்னையில் வசூல் செய்துள்ளது.

விஜய் சேதுபதியின் சிந்துபாத் முதல்வாரம் முதலிடத்தில் இருந்தது. இரண்டாவது வாரம் எட்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. முதல்வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூலித்த படம், இரண்டாவது வார இறுதியில் 6 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 1.85 கோடிகள்.

அன்னாபெல்லி கம்ஸ் ஹேnம் ஆங்கில பேய் படம் சென்றவார இறுதியில் 8.30 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை அதன் சென்னை வசூல் 77.60 லட்சங்கள்.

சமந்தா நடிப்பில் சென்ற வாரம் வெளியான தெலுங்குப் படம் ஓ பேபி. கொரியன் மிஸ் கிரானியின் தழுவலான இது தெலுங்கு பேசும் இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் முதல் 3 தினங்களில் வசூல் 9.45 லட்சங்கள்.

5. ஆர்டிகிடிள் 15 (இந்தி)

ஆயுஷ்மான் குரானா நடித்திருக்கும் ஆர்டிகிள் 15 நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் சென்னையில் 9.50 லட்சங்களை வசூலித்த படம் நேற்றுவரை 33.40 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

4. தர்மபிரபு

யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் தர்மபிரபு இந்து அடிப்படைவாத அமைப்புகளின் மிரட்டலால் பிக்கப்பாகியுள்ளது. சென்றவார இறுதியில் 9.60 லட்சங்களை வசூலித்திருக்கும் படம் இதுவரை சென்னையில் 57.25 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

3. களவாணி 2

களவாணி வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம்… களவாணியில் நடித்த அதே விமல், ஓவியா, இயக்கிய அதே சற்குணம் என இருந்தும் சென்றவாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 14 லட்சங்களை மட்டுமே வசூல் செய்து அதிர்ச்சியளித்துள்ளது. 

2. ராட்சசி

ஜோதிகாவின் ராட்சசி விமர்சகர்களால் சராசரியாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சென்றவாரம் வெளியான இந்தப் படம் சுமார் 68 லட்சங்களை வசூலித்து தமிழ் சினிமாவுக்கு ஆறுதலளித்துள்ளது.

1. ஸ்பைடர் மேன் – ஃபார் பிரம் ஹேhம் (ஆங்கிலம்)

இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் சென்ற வியாழக்கிழமை வெளியானது. வார இறுதியில் இதன் சென்னை வசூல் 1.35 கோடி. சிந்துபாத்தின் ஓபனிங் வசூலைவிட அதிகம். வியாழனையும் சேர்த்தால் 1.61 கோடி. பிளாக் பஸ்டர் ஓபனிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here