சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு முதலிடம் என்பதில் தமிழ்ப் படம் 2, கடைக்குட்டி சிங்கம் இரண்டுக்கும் நடுவில் கடும் போட்டி நிலவுகிறது.

சசிகுமாரின் அசுரவதம், அதர்வாவின் செம போத ஆகாதே இரண்டும் முழுமையாக திரையரங்குகளிலிருந்து விடைபெற்றுக் கொண்டன. அசுரவதம் சென்னையில் தட்டுத்தடுமாறி ஒரு கோடியை எட்டியது. செம போத ஆகாதே 74.60 லட்சங்களுடன் நடையைகட்டியது.

ஆங்கிலப்படமான இன்கிரெடிபிள்ஸ் 2 சென்ற வார இறுதியில் சென்னையில் 4.20 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல் 1.83 கோடி. அசுரவதம், செம போத ஆகாதே இரண்டின் ஒட்டுமொத்த சென்னை வசூலைவிட இது அதிகம்.

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் சென்றவார இறுதியில் 6.90 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் மொத்த சென்னை வசூல் 5.63 கோடிகள். படம் வெற்றி.

sanju011

5. சஞ்சு (இந்தி)
சஞ்சு சென்றவார இறுதியில் 8 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல் 2.82 கோடிகள்.

Dh5SigRXcAAGM3R

4. சூர்மா (இந்தி)
இந்திப் படமான இது சென்றவாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 10 லட்சங்கள்.

null

3. ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் (ஆங்கிலம்)
யுஎஸ்ஸில் இந்தப் படத்துக்கு சுமாரான வரவேற்பே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பரவாயில்லை. சென்னையில் மட்டும் முதல் மூன்று தினங்களில் இப்படம் 65.75 லட்சங்களை வசூலித்துள்ளது.

tamizh-padam-2-0-49

2. தமிழ்ப் படம் 2
சி.எஸ்.அமுதனின் தமிழ்ப்படம் 2 க்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். சென்ற வியாழன் வெளியான படம் வெள்ளி, சனி, ஞாயிறில் 1.38 கோடியை வசூலித்துள்ளது. வியாழனையும் சேர்த்தால் 2.03 கோடிகள். மிக நல்ல ஓபனிங்.

??????????????????????????????????????????????????????

1. கடைக்குட்டி சிங்கம்
கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் கடைக்குட்டி சிங்கம் நல்ல விமர்சனங்களுடன் சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. கடந்த வெள்ளி வெளியான படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.48 கோடியை வசூலித்து, பத்து லட்ச ரூபாய் இடைவெளியில் தமிழ்ப்படத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்