சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடிப்பதில் தி லயன் கிங், கடாரம் கொண்டான் படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

போதை ஏறி புத்தி மாறி திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றும் மோசமான வசூலையே அறுவடை செய்துள்ளது. 8.45 லட்சங்களுடன் இதன் சென்னை ஓட்டம் நிறுத்தத்துக்கு வந்துள்ளது. அதேபோல் தோழர் வெங்கடேசன் படமும் 2.50 லட்சங்களுடன் தரைதட்டியுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு 2 திரைப்படம் 25.85 லட்சங்களுடன் திருப்தியடைந்துள்ளது. 

ஜீவா நடித்த கொரில்லா திரைப்படம் சென்றவார இறுதியில் 2.65 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 67 லட்சங்கள். படம் தோல்வி. ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹேnம் சென்ற வார இறுதியில் 5.40 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல் 2.45 கோடிகள்.

5. கூர்கா

யோகி பாபு நாயகனாக நடித்திருக்கும் கூர்கா சென்றவார இறுதியில் 5.80 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் சென்னை வசூல் 79.60 லட்சங்கள்.

4. சூப்பர் 30 (இந்தி)

ஹிர்த்திக் ரோஷன் நடித்திருக்கும் சூப்பர் 30 இந்தி திரைப்படம் சென்றவார இறுதியில் 9.40 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரையான அதன் சென்னை வசூல் 65 லட்சங்கள்.

3. ஆடை

அமலா பால் நடித்திருக்கும் ஆடை நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. சென்றவாரம் வெளியான ஆடை முதல் மூன்று தினங்களில் 26.28 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

2. தி லயன் கிங் (ஆங்கிலம்)

இந்த ஹாலிவுட் ரியலிஸ்டிக் அனிமேஷன் திரைப்படம் சென்றவாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் 1.40 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சுமார் 230 திரையிடல்களில் இந்த வசூலை பெற்றுள்ளது.

1. கடராம் கொண்டான்

விக்ரமின் கடாரம் கொண்டான் சென்றவாரம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் என்றாலும் நல்ல ஓபனிங். முதல் மூன்று தினங்களில் சுமார் 350 திரையிடல்களில்  1.60 கோடியை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here