சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அவசரப்பிரிவில் திரையரங்குகள்

0
209

தமிழ் த்திரைப்படங்கள் இல்லாமல் தியேட்டர் நடத்த முடியும் என்று வீம்பு பிடித்த சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஐசியுவில் உள்ளன. சென்ற வார இறுதியில் சென்னை திரையரங்குகளில் வசூலே இல்லை.

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ரெடி பிளேயர் ஒன் முதல் வார இறுதியில் ஓரளவு வசூலித்து. இரண்டாவது வார இறுதியில் அதன் வசூல், 16.22 லட்சங்கள். நேற்றுவரை படத்தின் சென்னை வசூல், 83.18 லட்சங்கள்.

இர்பான் கான் நடித்துள்ள பிளாக்மெயில் இந்திப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 18.43 லட்சங்கள்.

5. சல் மோகன் ரங்கா (தெலுங்கு)
இந்த தெலுங்குப் படம் சென்ற வாரம் வெளியானது. சென்னையில் 72 காட்சிகளில் இப்படம் 21.81 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. ரங்கஸ்தலம் (தெலுங்கு)
முதல்வார இறுதியில் ஒரு கோடியைத் தாண்டி வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியில் 87 காட்சிகளில் 25.43 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 1.91 கோடி.

3. பாகி 2 (இந்தி)
இந்திப் படமான பாகி 2, சென்ற வார இறுதியில் 75 திரையிடல்களில் 27.43 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 1.58 கோடி.

2. பீட்டர் ராபிட் (ஆங்கிலம்)
சென்றவாரம் வெளியான இந்த ஆங்கிலப் படம் ஓரளவு நல்ல வசூலை பெற்றுள்ளது. முதல் மூன்று நாளில் 81 திரையிடல்களில் சுமார் 32.12 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.

1. தி ஹரிகேன் ஹெய்ஸ்ட் (ஆங்கிலம்)
ஆக்ஷன்பட ப்ரியர்களை குறி வைத்து வந்திருக்கும் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல், 38.50 லட்சங்கள். 108 திரையிடல்களில் இந்த வசூலை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: ’சித்தராமையா வெற்றிபெற திமுக போராடுகிறது’

இதையும் படியுங்கள்: #BanSterlite: ’ஸ்டெர்லைட்டை மூடினால்தான் எங்கள் மக்கள் வாழ முடியும்’

இதையும் படியுங்கள்: #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்