சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அட, அறம் இவ்ளோ வசூலித்ததா?

0
192

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அறம் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. படத்திற்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான நேர்மறை விமர்சனங்கள் அறத்தை வெற்றிப் படைப்பாக்கியிருக்கிறது. இதுவொரு நல்ல அறிகுறி.

மீரா கதிரவனின் விழித்திரு திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் படம் ஓடவில்லை. சென்னையில் படத்தின் வசூல் மிகச்சுமார். இதுவரை 26.50 லட்சங்களையே படம் வசூலித்துள்ளது. அமீர் கானின் இந்திப் படம், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் சென்ற வார இறுதியில் 3.83 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை அதன் சென்னை வசூல், 60.86 லட்சங்கள்.

ஆங்கிலப் படமான தோர் 3 வது பாகம் சென்ற வார இறுதியில் 21.80 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.96 கோடி. பல நேரடித் தமிழ்ப் படங்களைவிட இது அதிகம்.

5. மெர்சல்
மெர்சல் இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்துகிறது. சென்றவார இறுதியில் மெர்சல் 21.91 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை மெர்சலின் சென்னை வசூல், 14.46 கோடிகள்.

4. நெஞ்சில் துணிவிருந்தால்
சென்ற வாரம் வெளியான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் பலவீனமான கதை, திரைக்கதையால் ரசிகர்களை கவர தவறிவிட்டது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 34.67 லட்சங்கள்.

3. அவள்
சித்தார்த்தின் அவள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சென்ற வார இறுதியில் 52.21 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 1.87 கோடியை தனதாக்கியுள்ளது.

2. இப்படை வெல்லும்
உதயநிதியின் இப்படை வெல்லும் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. வெள்ளி, சனி, ஞாயிறில் இதன் சென்னை வசூல், 65.36 லட்சங்கள். வியாழனையும் சேர்த்தால் 88.36 லட்சங்கள்.

1. அறம்
கோபி நயினாரின் அறம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து வெற்றிவாகை சூடியுள்ளது. நயன்தாராவின் இதுநாள்வரையான இமேஜை ஒரேயிரவில் அறம் துடைத்து புது அடையாளத்தை தந்துள்ளது. இப்படிப்பட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பிரகாசிப்பதில்லை. அதுவும் அறம் விஷயத்தில் பொய்யாகியிருப்பது சிறப்பு. சென்ற வாரம் வெளியான அறம் முதல் மூன்று தினங்களில் 1.08 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது. நேர்மறை விமர்சனங்கள் காரணமாக வார நாள்களிலும் அறம் வசூலை அள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி நல்ல மிமிக்ரி கலைஞராக வருவார்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்