சென்னை திரும்பும்பும் 8 லட்சம் பேர் : அரசு சிறப்பு ஏற்பாடு

0
272

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களின் வசதிக்கேற்ப கடந்த 10ஆம் தேதி முதல் 14 ஆம்  தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 30,120 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதில் சென்னையில் இருந்து 16,075 பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மொத்தம் 14,045 பஸ்கள் இயக்கப்பட்டன.

இதில் அதிகபட்சமாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து அதிக அளவில் பயணிகள் வெளியூர் சென்றிருந்தனர்.

கடந்த 10 ஆம்தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை 16,666 பஸ்களில் மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 837 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

இது தவிர ரெயில், விமானம், கார் மூலமும் லட்சக்கணக்கான பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) முதல் மக்கள் சென்னை திரும்பத் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பொதுமக்கள் வசதிக்காக முக்கிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு  வருகின்றன.

சொந்த ஊர்களில் பொங்கல் கொண்டாடிய பொதுமக்கள் தங்களது ஊர்களில் இருந்து சென்னைக்கு நாளையும், நாளை மறுநாளும் அதிக அளவில் புறப்பட்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை நகர எல்லையில் நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு
ரெயில் நிலையங்களிலும் கூடுதல் பஸ்கள் விடப்படுகின்றன.

போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து பேருந்துகளால் போக்குவரத்துநெரிசல் ஏற்படாத வகையில் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here