சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

0
369

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம், சுவிதா சிறப்பு ரயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை எழும்பூரிலிருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு, சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என தெரிவித்துள்ளது.

அதேபோன்று ஜனவரி 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு திங்கட்கிழமை காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்