சென்னை கோயம்பேட்டில் சுகாதாரமற்ற 1000 தண்ணீர் கேன்கள் பறிமுதல்

0
84

தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை சென்னையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை உணவுப் பாதுகாப்பு மண்டலத்தில் 24 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. அவற்றில் இருந்து கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களிடம் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் கேன்களில் கொண்டு வரப்படும் குடிநீரானது தரமற்ற முறையில் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை கொளத்தூர், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய மூன்று இடங்களில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட குடிநீர் கேன்களை ஆய்வு செய்தனர்.

அவற்றில், நிறுவனத்தின் ஸ்டிக்கர் இல்லாத, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நீர் கலங்கலாகவும், அசுத்தமாகவும் இருந்த கேன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்தக் குடிநீர் ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினர். தரமற்ற கேன் குடிநீர் தொடர்பாக 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here