தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட வலியுறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இதனைப் போக்க கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், கண்டலேறு அணையில் 13.53 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையைக் கருதி தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரைத் திறந்துவிடும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : பயிர் இல்லேன்னா எங்க உயிர் இல்ல: செத்து மடியும் விவசாயிகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்