காசி தியேட்டர், சென்னை

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காத சிலர் மீது மற்றொரு தரப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்றும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கடந்த நவ.30ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : ”நீதிமன்றங்களில் தேசிய கீதம்” : மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சென்னை ஜாஃபர்கான் பேட்டை பகுதியில் உள்ள காசி தியேட்டரில் ”சென்னை-28” இரண்டாம் பாகம் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று, திரைப்படத்தின் இடைவேளையின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. அப்போது எழுந்து நின்று இளைஞர்கள் சிலர் மரியாதை செலுத்தவில்லை எனக் கூறி, அந்த இளைஞர்களை ஒரு தரப்பினர் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், எம்ஜிஆர் நகர் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்