தென்மேற்கு பருவக்காற்று எதிரோலியால் சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் வடக்கு, மத்திய மேற்கு, ஆந்திர கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலின் வடக்கு, மத்திய தெனமேற்கு பகுதிகளிலும் 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் அடுத்த 48 மணி நேரத்துக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலின் வடக்கு, மத்திய மேற்கு, ஆந்திர கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.மேலும் வங்க்கடலில் வரும் 19-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here