சென்னை அரசு பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

0
212

சென்னை அரசு பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முக ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார். அப்போது அவரது எம்எல்ஏ அலுவலகத்திற்கு அருகே இருந்த வீட்டில் நின்றிருந்த முதியவர்களுக்கு வணக்கம் வைத்து அவர்களிடமும் நலம் விசாரித்தார். முதல்வரின் இந்த செயல்பாடுகளால் தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல்வரை எளிதில் அணுகலாம் என்ற எண்ணம் பொதுமக்களுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை என்பதால் முகாம்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்பதால் கடந்த வாரம் 6 ஆவது கட்ட தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.

அவ்வாறு ரத்து செய்யப்பட்ட முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துரைப்பாக்கத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து பழைய மகாபலிபுரம் சாலையில் திநகர்- கண்ணகி நகர் இடையே செல்லும் எம்19பி பேருந்து அவ்வழியாக வந்தது.

அப்போது முதல்வர் ஸ்டாலின் திடீரென அந்த பேருந்தில் ஆய்வு செய்தார்.  ஒவ்வொரு இருக்கைக்கும் சென்ற முதல்வர் ஸ்டாலின் , அங்கிருந்தோரிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் கேட்டறிந்தார்.

அந்த பேருந்தில் ஒரு பெண் பயணி, மகளிருக்கு இலவச பேருந்து சேவை உள்ளிட்ட திட்டங்களை வரவேற்று அவரது கால்களில் விழுந்தார். முதல்வரும் வேண்டாம்மா என தடுத்தார்.  முதல்வரை பார்த்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here