சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பினர் குழுக்ககளாகக் கூடி போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகமே போராட்டக்களமாக மாறி வரும்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. மேலும் ஆட்டத்தைக் காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. பாதுகாப்புக்கு 4000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

police

இந்நிலையில், போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் வழிகளில் ஒன்றான அண்ணாசாலையில், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

protest

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளைக் கிழித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சேப்பாக்கம் மைதானம் அருகே கருப்பு பலூன்களை பறக்கவிட்டுள்ளனர். போராட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

black

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”