ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79% குறைந்துள்ளன என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குற்றங்கள் குறைந்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மாதம் 24-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு மேலும், மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை காவல்துறை சார்பில் அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியதாவது; வழக்கமாக நாட்களை ஒப்பிடும்போது, ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சாலை விபத்துக்களும் கணிசமாக குறைந்துள்ளன.

கொலைச்சம்பவங்கள் 44 சதவிகிதமும், கொள்ளை நிகழ்வுகள் 75 சதவிகிதமும், வீடு புகுந்து திருடுதல் 59 சதவிகிதமும் குறைந்துள்ளன. மொத்தட்தில் திருட்டு சம்பவங்கள் 81% குறைந்துள்ளன. சாலைப் போக்குவரத்து இறப்பு நிகழ்வுகள் 75% குறைந்துள்ளன. சாலை போக்குவரத்து காய வழக்குகள் 81% குறைவு குறைந்துள்ளன.

ஊரடங்கு சட்டம் பிறப்பித்த காலத்தில் 5 கொலை, ஒரு வழிப்பறி, 4 கொள்ளை, 12 வீடுபுகுந்து திருடிய வழக்குகள், 49 திருட்டு வழக்குகள், 17 காய வழக்குகள், போக்குவரத்து பிரிவில் 13 இறப்பு வழக்குகளும் மற்றும் 56 காய வழக்குகளும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here