தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,05,004 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 90,966 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,811 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் 58.84% ஆண்களும் 41.16% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேறறு(05.08.2020) மட்டும், 11,785 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 6) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    3322
2     மணலி        1659
3     மாதவரம்        2904
4     தண்டையார்பேட்டை    8923
5     ராயபுரம்        10,509     
6     திருவிக நகர்        7,320    
7     அம்பத்தூர்        4,893  
8     அண்ணா நகர்    10,472     
9     தேனாம்பேட்டை    10,065   
10     கோடம்பாக்கம்    10,625     
11     வளசரவாக்கம்    4,952   
12     ஆலந்தூர்        2,816  
13     அடையாறு        6,457    
14     பெருங்குடி        2,577     
15     சோழிங்கநல்லூர்    2,079    
16     இதர மாவட்டம்    1,393

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    404
2     மணலி        87
3     மாதவரம்        582
4     தண்டையார்பேட்டை    638
5     ராயபுரம்        768
6     திருவிக நகர்        884
7     அம்பத்தூர்        1462
8     அண்ணா நகர்    1308
9     தேனாம்பேட்டை    794
10     கோடம்பாக்கம்    1331
11     வளசரவாக்கம்    878
12     ஆலந்தூர்        584
13     அடையாறு        945
14     பெருங்குடி         488
15     சோழிங்கநல்லூர்    469
16     இதர மாவட்டம்    189 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here