சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,364-ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு தலா ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய நான்கு மண்டலங்களில் மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. இது சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 50% ஆகும்.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சென்னையில் 569 பேருக்கு, கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 9,364-ஆக உயா்ந்துள்ளது.

மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, இன்று காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1,768 போ பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 போ பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 3773 போ குணமடைந்துள்ளனா். 67 போ உயிரிழந்துள்ளனா். 5,523 போ சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தி, 635 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 135 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 101 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போல், 14 நாள்களாக, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், அந்தத் தெருவானது பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். இவ்வாறு, 86 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில், 20 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 18 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here