சென்னையில், திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்காத மாணவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் கட்டாயம் இசைக்க வேண்டும் என்றும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசியக்கொடி இடம்பெற வேண்டும் என்றும் கடந்தாண்டு நவ.30ஆம் தேதியன்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : கேரளா: தேசிய கீதம் பாடிய போது எழுந்து நிற்காத 12 பேரை போலீசார் கைது செய்தனர்

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்கும் போது மாணவர்கள் எழுந்து நிற்க மறுத்துள்ளதாகவும், இதனால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக திரையரங்கிற்கு வெளியில் வன்முறையில் ஈடுபட்ட ஏழு பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதையும் படியுங்கள் : சென்னை: தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நிற்காதவர்கள் மீது தாக்குதல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்