சென்னையில் முதற்கட்டமாக 2100 அரசு பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டி: 

நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் 4 அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். இதன் மூலம் பணிமனையில் உடனடியாக தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் அனைத்து பேருந்துகளிலும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.



பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், நரிக்குறவர்கள் என பல தரப்பினரும் பயணம் செய்வார்கள். ஆனால் சில நடத்துனர்கள் அவர்களை இறக்கிவிடுகின்றனர். எனவே, இது தொடர்பாக நடத்துனர், ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்று பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும். 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 29ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நடத்தப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here