சென்னையில் மீண்டும் ஆட்டோ, டாக்சி

0
316

ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் எல்லை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் சைக்கிள் ரிக் ஷாக்கள் 23 ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு பயணியை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இநிலையில், நேற்று(திங்கள்கிழமை) முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையத்திற்கு செல்வோர் ஆட்டோ, டாக்சி இயக்கப்படாததால் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதைத் தொடர்ந்து அனுமதிக்கப்படாத பகுதிகளில் இருந்தும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு பயணியரை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், டாக்சிகள், சைக்கிள் ரிக் ஷாக்கள் செல்ல  அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here