சென்னையில் மழை வெள்ள பாதிப்பு – உதவி எண்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208

0
372

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் உதவிகளுக்காக 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வங்க கடலில் வரும் செவ்வாய்க்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் சென்னை மாநகரத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை மாநகரம் பெருமழையை எதிர்கொண்டிருக்கிறது.
வெளுத்த கனமழை

சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. சென்னை மாநகரின் பல பகுதிகளில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னை நகரின் பல சுரங்க பாதைகளில் மழைநீர் பெருமளவு தேங்கி இருப்பதால் அப்பகுதிகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் எங்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சுரங்க பாதைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை வெள்ள நீரை அகற்றுவதில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here