புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக ஓட்டுவோர், பந்தயங்களில் ஈடுபவோரைத் தடுக்க சென்னையில் ஆயிரத்து 22 இடங்களில் தடுப்புகள் மற்றும் 162 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இவற்றில், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 263 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூறியபடி, இவர்களது ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரைக்கவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்ததாக 233 வழக்குகளும், அதிவேகமாகமாக வாகனம் ஓட்டியதாக 33 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்