சென்னையில் போராட்டம் நடத்த தடை

0
273

பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் சென்னையில் போராட்டம் நடத்த தடை விதித்து இன்று(சனிக்கிழமை) உத்தரவிட்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு நகரகாவல் சட்டம் 41-வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் இம் மாதம் 29 ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகிறது. அதன்படி,பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணா விரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இருப்பினும் பொது இடங்களில் நடத்தப்படும் அனைத்து விதமான போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளை நடத்த நினைப்பவர்கள், 5 நாள்களுக்கு முன்னதாகவே காவல்துறைக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். காவல்துறை அனுமதித்தால் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு தமிழ்நாடு நகர காவல் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் சென்னை பெருநகர காவல்துறையில் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here