சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி

Gold Price in Chennai (12th January 2021).

0
76

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்னையில் இன்று(ஜனவரி 12) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,677 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,680 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 24 ரூபாய் குறைந்து 37,416 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றுடன் சேர்த்து தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1664 அளவுக்கு குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,831 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,605 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,605 ஆகவும், கேரளாவில் ரூ.4,592 ஆகவும், டெல்லியில் ரூ.4,805 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,880 ஆகவும், ஒசூரில் ரூ.4,665 ஆகவும், பாண்டிச்சேரியில்ரூ.4,666 ஆகவும் இருக்கிறது.

தங்கம் விலை குறைந்திருந்தாலும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.69.60க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று அதன் விலை ரூ.69.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 69,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here