சென்னையில் தங்கம் விலை நிலவரம்

0
74

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து மூன்று நாட்கள் விலைச்சரிவு காணப்பட்ட நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று (நவம்பர் 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,745 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன்விலை 4,740 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 40 ரூபாய் உயர்ந்து 37,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒருகிராம்) நேற்று ரூ.5,120லிருந்து இன்று ரூ.5,125 ஆகஉயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று(வியாழக்கிழமை) 40,960 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 40 ரூபாய் உயர்ந்து 41,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலைநேற்று ரூ.66லிருந்து இன்று ரூ.66.50 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here