சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15ஆம் தேதி தமிழ்நாடு மதுபானம் விதிகளின் படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி நேற்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர  தினத்தை  முன்னிட்டு  தமிழ்நாடுமதுபானம்  விதிகள்படி  சென்னை  மாவட்டத்தில்  உள்ள  அனைத்துமதுபான  சில்லறை  விற்பனை  கடைகள்(டாஸ்மாக்),   பார்கள், கிளப்புகள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய
 தினம் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது.  தவறினால்மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு
 அவர் கூறியுள்ளார்.